Home » Varma Uruppu 32

Varma Uruppu 32

Narambu Varma Uruppugal 32
நரம்பு வர்ம உறுப்புகள் 32

(உறுப்பு எண் 20 – பாடல்)…

சீர்பெருகு மனிதனுக்கு செப்புவேன் செப்புபொருத்துக்கும் வன்மனமாய் உருவாக்கும் தாழ்வதாக மடக்கெலும்பு மறையெலும்பு நிறையெலும்பு அசனமுட்டெலும்பு கட்டெலும்பு பொருத்து துன்டெலும்பு வளயெலும்பு இத்தனைக்கும் 76 துண்டுகூடி ஒடியுமப்பா அசைந்து வெளியேகாணும் அப்படியே முறிந்து தானால் ஆள்தனை படுக்கையில் கிடத்திதானும். சிறுநெருஞ்சிபற்றுதான் மேலே தடவி கச்சைகெட்டி இருகையும் கொண்டு புட்டிபொருத்தோடு செப்பை ஆள்தனை பிடிக்கச்சொல்லி அசைத்து தடவித்தாக்கி எலும்பெல்லாம் நிமிர்ந்தவுடன் கால்ரெண்டும் பிடித்து அசைத்து இழுத்துச்செருவி கச்சையை இருக்ககெட்டி காப்பித்தண்ணீர் உள்ளே அருந்தச்சொல்லி அன்னப்பாலும் அடிக்கடி கொடுக்க வேண்டும் -3- நாளும் வயறூதும் மூச்சு முட்டும் இத்தனையும் குணங்கள் வந்தால் கச்சையை தழுத்திவிட்டு காயத்திருமேனி எண்ணெய் உள்ளுக்கு கொடுத்துவிடு உறுதியாக -2- நாள் கெட்டாமலே முன்சொன்ன ஆலம்பால் எண்ணெயை தடவித்தாக்கி நிரப்பாக்கி விரணங்கள் இருக்குமானால் ஆவிபோக இடம் இட்டு எண்ணையது போட்டு கொள்ளே, போட்டுவர -9- ம் நாள்வரை அசையாமல் பகைதனில் கெட்டிபோடு அடிக்கடி வாய்பிழந்து வானம்பார்க்கும் பார்த்தவுடன் காயராச்சாதி தைலமதை உள்ளுக்கு கொடுக்க வேண்டும் -41- நாள் வரை இந்தமுறை செய்து வந்து புட்டி ஊறுமப்பா ஊறினவுடன்தானே அசைவு அசைத்துப்பாரு ஆள்தனை தூக்கி நிறுத்திபாரு பெலமது இருக்குமானால் நடக்கச்சொல்லு கூசமும் வேதனையும் நரம்புகொழுத்தும் இருக்குமானால் நரம்பரையைபிடித்திருத்தி அசைத்துக் கொள்ளு அசைத்தவுடன் திமிர்மாறும் குணங்கள் காணும் தானே. தானாக இந்தமுறை கூறறிந்து -90- நாள்வரை பரிகாரம் செய்துகொள்ளே கொள்ளுவாய் உடும்பு லேகியம் விறுவிறுப்பாய் கிண்டி உள்ளுக்கு கொடுத்துவந்தால் ரெத்தம் சுத்தியாகும் பித்தமடங்கி நிற்கும் பொன்னாங்கண்ணி எண்ணெய் தலையில் வைத்துக் குளிக்கச்சொல்லே சொல்லுமே மறுபுமும் இந்த அளவுதானே இப்படியே குளித்துவர பரிகாரமதில் காய்ச்சல் ஜுரம் தகழும் வலதுபுறம் வந்துசேரும் சேருமே காச்சலது வந்துதானால் பண்டாரக்குழிசைதனை அனுபானம் உரசி இஞ்சித்தண்ணீரில் கொடுக்க வேண்டும் உடனே பறந்துபோகும் உண்மையாய் மனமறிந்து மனம் கூடி கையறிந்து மெய்யறிந்து பதமாய் பிடித்திரு தள்ளி இருகையும் கொண்டு இதனைத்தடவித்தாக்கி விசையெல்லாம் கண்டறிந்து பொருத்திக் காசைக்கட்டி கொள்வாய் புகழ் உண்டாகும் புத்திரனே புத்தியில் மனாமலே நேரறிந்து நடந்து கொள்ளு துண்டது இசையும் போது கண்ணுரெண்டும் மேச்சொருவி வாய் பூட்டு மயக்கம் சோர்வை இருந்துதானால் நரம்பை இருத்திவிடு நரம்புமுடிச்சிதனில் கைவைத்து இருத்தி தடவிகொள்ளு திரேகவெல்லாம் செம்பழுப்பு நிறமுமாகும் கண்டறிந்து பரிகாரம் செய்வாயானால் கட்டாயம் நரம்புமுடிச்சி அசையாமல் தடவிதாக்கி கச்சைகெட்டி நடந்து கொள்ளு உண்மையாய் இந்தமுறை பரிகாரம் எழிதில் தீரும் இப்படியே செய்தாயானால் ஏகப்பரப்பிரம்மம் கூடி நிற்கும் தீருதனே- மலதாங்கி நெய் கரண்டி வீதம் உள்ளுக்கு கொடுப்பாயானால் புட்டிபுட்டி பொருத்தும் அடிஅசைப்படி தட்டுப்புட்டி நங்கன அதிசுற்றிப்பிடி கொழுத்து இத்தனையும் குணமாகும் ரெத்தமது சுத்தியாகும், இதற்குமுன் சொன்ன உடும்பு லேகியம், காயத்திருமேனி எண்ணெய், காயராச்சாதி எண்ணெய் உள்ளுக்கு கொடுத்துவர ரெத்தம் சுத்தியாகி குணமாகும் இல்லையேல் 90 நாளில் முடம்தானே!!!