Home » Narambu Vagadam

Narambu Vagadam

நரம்பு வாகடம்
எண்சான் உடம்பிற்கு சிரசேபிரமாணம் என்ற திருவருள் தேகம் தேடினும் கண்ணாலும் கபாலமும் கலை நாதனும் அங்கொரு முறையாய் நடநடந்து கண்குளியாமலே72000 நரம்புக்குளே முடிச்சு 4448 உம் துடிதுடிக்கும் 96 தத்துவமும் வருத்திவைக்கும் தசவாயு 10 வாசலும் அறிந்து கொண்டு வந்த குருவை போற்றி மயிரது 3 .5 கோடி துவாரமும் கறுக்கும் நாள் தனில் கழித்த இரவுத்தனும் ஒன்றொன்றாய் வெளுத்து போகும் உறுதிச்சொல்வேன் ஊரோ வெளுக்க தனித்தனியே பதபதவென்று பஞ்ச பூதம் அடங்கி நிற்கும் அப்பனே வயதுதான் நடுவுக்கு மேல் உள் அளவு கொள்அளவு சொரூரா நடக்கும் குணங்கள் மாறும் 64 கலைக்குள்ளே 60 ஆண்டும் கழிய’ அசதி வரும் வேலை தனில் மனிதனுக்கு வயதுதான் நூறானால் மயிரெல்லாம் வெளுத்து போகும் மனமும் வெளுத்துப்போகும் வர்மாமெல்லாம் கர்மமாகும் 64 கலைகளும் ஆடியே துடிதுடிக்கும் உயிர்நரம்பு உறுதியாய் நினைவிருக்கும் கருவிதனில் உள்ளொடு தளர்ந்து போகும் லிங்கம் தானும் தளர்ந்து போகும் வள்ளலே கண்ணகா கண்டுபிடி பிடித்துமே 32 உறுப்பு தானும் உள்ளொடு உள் சுற்றி 18 மேகம் குடி ஒரு நெட்டு உருவாக்கி கருநெட்டு இடத்துக்குள்ளே 18 நடுதலைக்குள் நாசி தனில்போகும் சுவாசம் வீசியே அங்கொரு உயிர் உண்டாகி அங்குலம் தவருமலே சொல்குளம் வளத்திருமே தன்குலம் என்ற பின்னே ஆண் பெண் என்று தயவுடன் அறிந்து கண்டறிந்தார் அகத்தீசா வீரமாமுனிவர் தானே ஆதிபரனை காண அவர் தன் அங்குசென்றார் உயிரோடு போனார் உறுதிதானே தங்கியே நிற்கும்போது பூமியும் ஆகாயமும் சூரிய சந்திர நட்சத்திரம் தானும் கணக்காக வெளிச்ச மது தரும்போது கண்ணன் இரண்டு பேரும் கண்ணை மூடி ஓடியே நிலை நின்றான் கூட்டுக்குள்ளே கூறுவேனே !!!